விருதுநகர், 22.03.2024
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தூத்துக்குடி கிளை சார்பில் 22 மார்ச் 2024 அன்று ராஜபாளையம் மில்ஸி ஊழியர்களுக்கு பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவிப் பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு மாநிலப் பயியாளர் திரு.இ. பிளைத் சுதர் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சியை வழங்கினார்.
இப்பயிற்சி முகாமில், அவசரகால வெளியேற்ற நடைமுறைகள், விபத்துகளில் சிக்கியவர்களைத் தேடி பாதுகாப்பாக மீட்பது, காயங்களுக்கு சிகிச்சை அளிப்பது, எலும்பு முறிவுகள், மாரடைப்பு மற்றும் பக்கவாதங்களைக் கண்டறிந்து முதலுதவி அளிப்பது குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.