ஜீன் ஹென்றி டுனான்ட் - வாழ்க்கைக்குறிப்பு

ஜீன் ஹென்றி டியூனாண்ட் அவர்கள் ரெட் கிராஸ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். ஹென்றி அவர்கள்  இளம் வயதிலேயே தொண்டுள்ளம் ஒரு கொண்டவராகத் திகழ்ந்தார்.



வாழ்க்கைக்குறிப்பு  


ஜீன் ஹென்றி டியூனாண்ட் அவர்கள் 08.05.1828.ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரத்தில் ஒரு வணிகக்குடும்பத்தில் பிறந்தார். 


1849.ம் ஆண்டு வங்கி விஷயங்களைப் பயிலுவதற்காக ஓர் வங்கியில் பயிற்சி ஊழியராகச் சேர்க்கப்பட்டார்.


1853.ம் ஆண்டு அல்ஜீரியாவிலுள்ள அவர் பணிபுரியும் வங்கியின் துணை நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராகத் தற்காலிகப் பணிநியமனம் செய்யப்பட்டார்.


24.06.1859.ம் ஆண்டு நடைபெற்ற  சோல்ஃபெரினோ போர்.


1862.ம் ஆண்டு "சோல்ஃபெரினோவின் நினைவு" என்ற நூல் வெளியிடப்பட்டது.


1863.ம் ஆண்டு ஜெனீவா பொதுநலச் சங்கம் கூடியது. அவர்கள் ஹென்றி டியூனாண்ட்க்கு அழைப்பு விடுத்து, அவர் உட்ப்பட  ஐந்து பேர் கொண்ட ஓர் குழு உருவாகியது. 


நிவாரண சங்கங்களைத் தொடங்குவதற்கு அவர்களைச் சம்மதிக்க வைக்கும் பொருட்டு ஹென்றி அவர்கள், ஐரோப்பாவிலுள்ள பல தலைவர்களைச் சந்தித்தனர். அந்த ஐந்து பேர் கொண்ட அவையானது ஜெனீவாவில் ஒரு பேரவையைக் கூட்டியது. 


அதற்கு 16 நாடுகள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பின. நிவாரணச் சங்கங்கள் அமைக்கப்பட வேண்டுமென்று இந்தப் பேரவைப் பரிந்துரை செய்ததுடன், அவைகளுக்குப் பாதுகாப்பும் ஆதரவும் தரும்படி அரசுகளைக் கேட்டுக் கொண்டது. இந்தப் பேரவைப் பரிந்துரை செய்ததுடன், அவைகளுக்குப் பாதுகாப்பும் ஆதரவும் தரும்படி அரசுகளைக் கேட்டுக் கொண்டது. இந்தப் பேரவை 10 தீர்மானங்களை ஏற்றுக் கொண்டது. சாசனமாக செஞ்சிலுவை இயக்கத்தின் நிறுவனச் அமைந்ததுடன் டுனாண்ட் முன்மொழிந்த காயம்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிக்குழுக்களின் அலுவல்களையும் பணிபுரியும் வகையினையும் அச்சாசனம் வரையறுக்கிறது. இவ்வாறு செஞ்சிலுவைச் சங்கம் பிறந்தது.


22.08.1864.ம் ஆண்டு முதல் ஜெனீவா ஒப்பந்தத்தில் 12 நாடுகள்  கையொப்பமிடப்பட்டது.


1867.ம் ஆண்டு  ஹென்றி அவர்கள் நீண்ட கால கவனிப்பின்மை காரணமாக அவரது வர்த்தக நிறுவனம் முடப்பட வேண்டியதாயிற்று. அவர் ஜெனீவாவை விட்டு அகன்றார். மீண்டும் அங்குத் திரும்பி வரவேயில்லை.


1867-1887.ம் ஆண்டு  நண்பர்கள் தந்த மிகச் சொற்ப உதவிகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் குறைந்த ஊதியத்தைக் கொண்டு மிகவும் கடின வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்.


அவர் ரெட்கிராஸ் சங்கத்தைத் தோற்றுவித்தமைக்காக மரியாதை செய்யப்பட பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் மக்கள் முன் எப்போதாவது சிறிது நேரம் தோன்றுவார். அதிக நேரங்கள் அவர் மறைவாகவே வாழ்ந்தார்.


1887.ம் ஆண்டு ஜூலை திடீரென அவர் சுவிட்சர்லாந்திலுள்ள ”ஹெய்டன்" நகரில் தோன்றினார்.


1892.ம் ஆண்டு  உள்ளுர் மருத்துவமனையில் வாழ்க்கையை மேற்கொண்டார்.

 

1895.ம் ஆண்டு  ஒரு நாள் ஓர் இளம் பத்திரிகையாளர், ஹென்றி அவர்கள் பற்றிக் கேள்வியுற்று அவரைப் பேட்டி கண்டார். ஒரு சில நாட்களுக்குள், அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை உலகம் அறிந்தது. அவருக்கு உதவி செய்வதற்காக கோரிக்கைகள் குவிந்தன. ஆனால், அவர் தமக்கு எந்தவிதமான உதவிகளும் தேவைப்படாது என்று தெளிவாக்கினார். மருத்துவமனை மற்றும் அவரது அருகிலிருப்போர்களின் உதவிகளே அவருக்குப் போதுமானவையாக இருந்தன.



1901.ம் ஆண்டு  முதல் சமாதானத்துக்கான பரிசினை நோபல் குழு இவருக்கும், பிரட்ரிக் பாலி என்ற பிரெஞ்சுக்காரருக்கும் கூட்டாக பகிர்ந்து கொள்ளுமாறு கொடுத்தது. அதற்கானப் பதக்கம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


30.10.1910.ம் ஆண்டு  சுவிட்சர்லாந்திலுள்ள "ஹெய்டன்" நகரில் இயற்கை எய்தினார்.

To Top