ஹென்றி டியூனாண்ட் அவர்கள் முதலாவது திட்டத்தின் விளைவாக ரெட் கிராஸ் இயக்கம் உருவானது. அவரது இரண்டாவது திட்டத்தின் விளைவாக முதலாவது ஜெனிவா ஒப்பந்தம் ஏற்பட்டு சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் (IHL - International Humanitarian Law) இயற்றப்பட்டன.
ஹென்றி டியூனாண்ட் அவர்கள் இந்தப் புத்தகத்தை தனது சொந்த செலவில் வெளியிட்டு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களுக்கு நகல்களை வழங்கினார். ஜெனீவாவில் நடந்த பொதுச் சபையில் ஹென்றி அவர்களின் திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவற்றை செயல்படுத்த ஜெனரல் ஹென்றி டுஃபோர், குஸ்டாவ் மொய்னியர், டாக்டர்.லூயிஸ் அப்பியா, ஜீன் ஹென்றி டூனான்ட் மற்றும் டாக்டர்.தியோடர் மௌனோயர் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட "ஐவர் குழு" அமைக்கப்பட்டது.
ஐவர் குழு
1863.ம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில் 16 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன் விளைவாக, ஆகஸ்ட் 22, 1864 அன்று ஜெனீவாவில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. (First Geneva Convention) மேலே குறிப்பிடப்பட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு பின்னர் சர்வதேச ரெட் கிராஸ் அமைப்பாக (ICRC) உருவானது. இவ்வியக்கம் அணைத்து நாடுகளிலும் ரெட் கிராஸ் இயக்கமாக உருவாக்கப் பாடுபட்டது.