சா.இ.நா.எட்வர்டு மேல்நிலைப்பள்ளி விழிப்புணர்வு மனித சங்கிலி

 

விருதுநகர், 16.02.2026


விருதுநகர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிளை சார்பில், சாத்தூர் சா.இ.நா.எட்வர்டு மேல்நிலைப்பள்ளியில் தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு மனித சங்கிலி - 2026 நிகழ்ச்சிக்கு 16-02-2026 இன்று பள்ளியின் தலைமையாசிரியர் திரு.A.தேவதாசன் அவர்கள் தலைமை தாங்கி, மாணவர்களின் வாழ்வில் ஒழுக்கமும் மன உறுதியும் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து தலைமையுரை ஆற்றினார். பள்ளியின் இளையோர் ரெட் கிராஸ் (JRC) ஆலோசகர் திரு.S.மோகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கிளை சார்பாக துணைச் சேர்மன் திரு.கோவிந்தன் அவர்கள் மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனையின் மருத்துவர் முனியசாய் கேசவன் (MBBS, DCH., PDRT) அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். மருத்துவர் அவர் பேசுகையில், போதைப்பொருள் பழக்கத்தினால் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் குறித்தும், இக்கட்டான சூழல்களில் தற்கொலை எண்ணங்களைக் கைவிட்டு மனநல ஆலோசனைகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் விரிவாக விளக்கினார்.

தொடர்ந்து, பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு.P.ராஜ் அவர்கள் மற்றும் 9-ஆம் வகுப்பு 'அ' பிரிவு மாணவர் வெற்றிவேல் ஆகியோர் விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியின் நிறைவாக, மாவட்ட இந்திய ரெட் கிராஸ் செயலாளர் திரு.R.பாலமுருகன் அவர்கள் நன்றி கூறினார். விழிப்புணர்வு மனித சங்கிலி ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

To Top