பன்னாட்டு ரெட் கிராஸ் கூட்டமைப்பு

INTERNATIONAL FEDERATION OF RED CROSS & RED CRESCENT SOCIETIES - IFRC


பன்னாட்டு ரெட் கிராஸ் கூட்டமைப்பு என்பது எந்தவொரு அரசாங்கத்தையும் சாராத, அரசியல், மத மற்றும் இனப் பிணைப்புகளிலிருந்து விடுபட்ட ஒரு அரசு சாரா அமைப்பாகும். இது அனைத்து நாடுகளும் அனைத்து தேசிய சங்கங்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஒரு அமைப்பாகும். இந்தக் கூட்டமைப்பின் தலைமையகம் ஜெனீவாவில் அமைந்துள்ளது.

இந்தக் கூட்டமைப்பு மே 5, 1919 அன்று பி. ஹென்றி டேவிட்சன் என்பவரால் நிறுவப்பட்டது. இது போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் பொது நலனை விரிவுபடுத்துவதற்கும், ஏற்கனவே உள்ள ரெட் கிராஸ் / ரெட் கிரஸன்ட் நலப்பணிகளை வலுப்படுத்தி ஒருங்கிணைப்பதும், புதிய சங்கங்கள் உருவாவதை ஊக்குவிப்பதற்கும் செயல்படுகிறது.


இந்தக் கூட்டமைப்பு தேசிய சங்கங்களின் நிவாரணப் பணிகளை (மோதல் பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில்) ஒருங்கிணைக்கிறது. இது மேம்பாட்டுத் திட்டங்களையும் ஊக்குவிக்கிறதுடன், தேசிய கிளைகளை உருவாக்குவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் உதவுகிறது. மேலும், இந்தக் கூட்டமைப்பு ரெட் கிராஸ் / ரெட் கிரஸன்ட்  அமைப்பின் கொள்கைகளையும் விதிகளையும் நிலைநிறுத்தப் பாடுபடுகிறது, அத்துடன் தேசிய சங்கங்களுக்கு ஒரு சர்வதேசத் தொடர்பு அமைப்பாகவும் செயல்படுகிறது.


இந்தக் கூட்டமைப்பு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் நிலையை மேம்படுத்துவதையும், தேசிய சங்கங்களின் உலகளாவிய திட்டங்களை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இது போர் மற்றும் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கான நிவாரணப் பணிகள், சமூக சேவைகள் மற்றும் தேசிய சங்கங்களின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறது.


சர்வதேச ரெட் கிராஸ் / ரெட் கிரஸன்ட் கூட்டமைப்பு, அதன் உறுப்பு தேசிய சங்கங்களின் மனிதாபிமான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து உதவுவதில் மூன்று முக்கிய செயல்பாடுகள் மூலம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதாவது அவற்றை ஊக்குவித்தல், ஆதரவளித்தல் மற்றும் ஆலோசனை வழங்குதல், அத்துடன் உறுப்பு தேசிய சங்கங்களுக்கு இடையே கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றை முக்கிய பங்காகக் கொண்டுள்ளது.


இந்த இயக்கம், முறையாக அங்கீகாரம் பெற்ற உறுப்பினர்கள், ஜெனிவா உடன்பாடுகளில் கையொப்பமிட்டவர்கள். அனைத்து நாடுகளிலும் சேவை செய்வோர் தன்னாட்சி நிலை (சுதந்திரமாக) ஆகியோரைக் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.



To Top