இளையோர் ரெட் கிராஸ்: இந்தியா


 இந்தியாவில் இளையோர் ரெட் கிராஸ் (ஜே.ஆர்.சி) 


1920.ம் ஆண்டுக்குள் இளையோர் ரெட் கிராஸ் (ஜே.ஆர்.சி) உலகம் முழுவதும் பரவிற்று. இன்றைக்கு உலகில் ஏறத்தாழ 176 நாடுகளில் ஜூனியர் ரெட் கிராஸ் (ஜே.ஆர்.சி) இயங்கி வருகிறது.


இந்தியாவில் முதன்முதலில் இளையோர் ரெட் கிராஸ் (ஜே.ஆர்.சி) 1926.ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் துவக்கப்பட்டு, படிப்படியாகப் பரவி டெல்லி முதலான பல மாநிலங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு, சிறப்பாக நடைபெறுகிறது. 1953.ம் ஆண்டு  டிசம்பர் திங்கள் தமிழ்நாட்டில் இளையோர் ரெட் கிராஸ் (ஜே.ஆர்.சி) துவங்கப்பட்டது.


இளையோர் ரெட் கிராஸ் (ஜே.ஆர்.சி)  நோக்கமும், கொள்கைகளும் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்துவதுடன் அவர்களுடைய ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்தும் என அறிந்த கல்வியாளர்கள் இதைப் பள்ளிகளில் ஏற்படுத்தினர். 

To Top