இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தென்காசி மாவட்ட கிளை, சுஸ்லான் அறக்கட்டளை, சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட், நெல்லை கேன்சர் சென்டர் மற்றும் நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமணை இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆலங்குளம், வீராணம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இம் மருத்துவ முகாமில் மக்களுக்கு இலவச பரிசோதனைகள், குறிப்பாக மார்பக புற்று நோய் பரிசோதனை, கண் பார்வை பரிசோதனை செய்யப்பட்டது.
மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், மருத்துவ முகாமை பஞ்சாயத்து தலைவர் திரு.வீரபாண்டியன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். மருத்துவர் ராஜசேகர் அவர்கள், திரலேகா அவர்கள், திரு.சண்முகநாதன் அவர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கு பரிசோதனைகள் செய்தனர். இம் முகாமை ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாக குழு உறுப்பினர் திரு.அந்தோணி அவர்கள், திரு.ஆனந்த் அவர்கள், சுஸ்லான் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் திரு.பெரியசாமி அவர்கள், மற்றும் சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் திரு.டிக்சன் குமார் அவர்கள் ஆகியோர்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.