போதை இல்லாத தமிழகம், விபத்து இல்லாத மதுரை

 

மதுரை, 02.07.2026

மதுரை லேடி டோக் கல்லூரியில் போதை இல்லாத தமிழகம், விபத்து இல்லாத மதுரை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரெட் கிராஸ் சொசைட்டியின் செயற்குழு உறுப்பினர் திரு. ராஜ்குமார் அவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர் சித்ரா அவர்கள், மதுவிலக்கு மற்றும் அமலாக்க காவல்துறை ஆய்வாளர் மாரியம்மாள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். 

இந்தக் கருத்தரங்கில் போதையினால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் வாகன ஓட்டிகள் போதை பொருட்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் தடுக்கும் வழிமுறைகள் அரசு மேற்கொண்டு வரும் செயல் திட்டங்கள்  குறித்து கருத்துரை வழங்கினார்கள். மேலும் கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். 



To Top