அல்லம்பட்டியில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

 

விருதுநகர், 30.06.2026

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி விருதுநகர் மாவட்ட கிளை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம, விருட்சம் மகளிர் மேம்பாட்டு தொண்டு நிறுவனம் மற்றும் மாஸ் தொண்டு நிறுவனம் இணைந்து, விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களின் அறிவுரை படியும், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட சேர்மன் மற்றும் துணைச் சார்பின் அவர்களின் வழிகாட்டுதலின்படி 30.06.2026 வெள்ளிக்கிழமை அன்று விருதுநகர், அல்லம்பட்டி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 

இம் முகாமில் பொது மக்களுக்கு இலவச பொது மருத்துவ பரிசோதனை, காசநோய் பரிசோதனை மற்றும் நோய் தொற்று கண்டறிதல் பரிசோதனை ஆகியவை நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கலந்து கொண்ட மக்களுக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட மேற்பார்வையாளர் திரு.அய்யனார் அவர்கள் மற்றும் மாவட்ட உதவியாளர்  (நிதி) திரு.சரவணன் அவர்கள் முகாமை ஏற்பாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் திரு.பாலமுருகன் அவர்கள், மருத்துவக் குழு மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


To Top