போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

 

அரியலூர், 30.06.2026


அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி  மாவட்ட கிளையின் சார்பில், 30.06.2026 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி அளவில் திருமானூர் ஒன்றியம், கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு "போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் மாவட்டச்செயலாளர் திரு.ஆ.சண்முகம் அவர்கள் வரவேற்றார்கள்.


அரியலூர் மாவட்டத் தலைவர் திரு.செ.ஜெயராமன் அவர்கள் தலைமை வகித்தார்கள், கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியர் திரு.மூ. சுரேஷ்குமார் அவர்கள்முன்னிலை வகித்தார்கள். சிறப்பு விருந்தினராக திருமதி.வி.வனிதா திருமானூர் காவல் துறை ஆய்வாளர் அவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு சார்ந்த  விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்கள். 


விழிப்புணர்வு கருத்தாளர்களாகமாவட்டத் துணைத் தலைவர் திரு.எஸ்.எம் சந்திரசேகர் அவர்கள், மேனாள் மாவட்ட தலைவர் திரு.அ.நல்லப்பன் அவர்கள், நியமன துணைத் தலைவர் திரு.க.செல்வராஜ் அவர்கள், இணைச்செயலாளர் திரு.மு.அசோக்குமார் அவர்கள், துணைபுரவலர் திரு.து.காமராஜ் அவர்கள், நிர்வாக குழு உறுப்பினர் திரு.மா சத்தியமூர்த்தி அவர்கள், மாவட்ட கன்வீனர் திரு.சி.சிவசங்கர் அவர்கள், ஆயுள் உறுப்பினர் திரு.மு.சடையப்பன் அவர்கள் உள்ளிட்டோர் போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கினார்கள்.


இந்த கருத்தரங்கில் 300 மேற்பட்ட மாணவ மாணவிகள் அனைவரும் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்வில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மேனாள் நிர்வாக்குழு  உறுப்பினர்கள்  திரு.ஏ.முருகானந்தம் அவர்கள் திரு.அ.அமலன் அந்துவான் அவர்கள்கலந்து கொண்டு நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து சிறப்பித்தனர். ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலர் திருமதி.த.மாலா கிறிஸ்டி ரோஸ்லின் அவர்கள் நிறைவாக  நன்றி கூற நிகழ்வு நிறைவுற்றது.




To Top