கல்வி உதவித் தொகை வழங்குதல் மற்றும் மருத்துவ முகாம்

 

சிவகங்கை, 30.06.2026


இராமசாமி அலமேலு அறக்கட்டளை சார்பில், காரைக்குடியில் இரண்டாம் ஆண்டிற்கான நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. செஞ்சை சொந்தமான தினா வள்ளி மஹால் திருமண மண்டபத்தில், பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்குதல் மற்றும் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.


தமிழக கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு அவர்கள், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 154 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையினை வழங்கி சிறப்பித்தார். பின் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார். மேலும், ஏழை மாணவர்களுக்கு இலவச சீருடைகள் மற்றும் கல்வி உதவித்தொகைகளை வழங்கினார். மாநில அளவிலான விளையாட்டு வீரர்களைக் கௌரவித்ததுடன், பள்ளிகளில் சிறப்பிடம் பிடித்த 134 மாணவர்களுக்குப் பணப்பரிசுகளையும் வழங்கினார்.


இந்த நிகழ்வில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி  சிவகங்கை மாவட்டக் கிளை சார்பில், மாவட்ட சேர்மன் திரு.சுந்தரராமன் அவர்கள், மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.




To Top