தென்காசி, 25.06.2025
ஜே.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி தென்காசியில் 25.06.2025 அன்று போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆய்க்குடி காவல் நிலையத்தின் சிறப்பு உட்கோட்ட காவல் ஆய்வாளர் திரு. சுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மாநில முதலுதவி விரிவுரையாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் திரு.பிளைத் சுதர் அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர்.சிவநேசன் அவர்கள் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். YRC மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.சிவசெல்வகணேஷ் அவர்கள், வணிகவியல் துறை (B.Com) பேராசிரியர்களுடன் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.