மதுரை, 25.06.2026
உலக போதை தடுப்பு நாளை முன்னிட்டு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்ட கிளை சார்பாக மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தேவநாதன் அவர்கள் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் முன்னிலையில் போதைக்கு எதிரான கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்கி வைக்கப்பட்டு, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட கலால் உதவி ஆணையர் திரு.பச்சமுத்து அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்ட கிளை செயற்குழு உறுப்பினரும், போதை தடுப்பு குழு ஒருங்கிணைப்பாளருமான திரு.ராஜ்குமார் அவர்கள் போதையினால் ஏற்படும் உடல் சார்ந்த பிரச்சினைகள் மனம் சார்ந்த பிரச்சினைகள் பொருளாதார பிரச்சினைகள் மற்றும் காவல் துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து கருத்துரை வழங்கினார். முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.