ஆளுநர் அவர்கள் முன்னிலையில் 7 மாவட்ட கிளைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

RED THINK

 

தமிழ்நாடு, 23.08.2024

REC லிமிடெட் அறக்கட்டளை பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் கீழ், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளைக்கு 7 மாவட்டங்களுக்கு நடமாடும் மருத்துவ அலகுகளுக்கான (Mobile Medical Units) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ் ஒப்பந்தத்தை மாண்புமிகு தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் முன்னிலையில், REC லிமிடெட் அறக்கட்டளை சுயாதீன இயக்குநர் திரு.நாராயணன் திருப்பதி அவர்களிடம் இருந்து,  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை சேர்மன் டாக்டர்.நீதிபதி.ஜெயச்சந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள், REC லிமிடெட் அறக்கட்டளை பொறுப்பளர்கள் மற்றும் 7 மாவட்ட கிளை பொறுப்பளர்கள் கலந்து கொண்டனர். 



3/related/default