பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

விருதுநகர் கல்வி மாவட்டம், 27.11.2024 

விருதுநகர் க்ஷத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளியில்,  27.11.2024 புதன்கிழமை மாலை 03:00 மணி அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சேர்மன் திரு.கண்ணன் அவர்கள் தலைமையில், பொருளாளர் திரு.வேலையா அவர்கள் முன்னிலையில், விருந்தினராக விருதுநகர் கல்வி மாவட்ட ஜே.ஆர்.சி ஒருங்கிணைப்பாளர் திரு.கணேசன் அவர்கள், சுகாதார அலுவலர் திரு.பாண்டியன் அவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.அமுதா அவர்கள் கலந்து கொண்டு மாணவியர்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியை பள்ளி ஜே.ஆர்.சி பொறுப்பாளர் திருமதி.வேலாச்சி அவர்கள், மாவட்ட செயலாளர் திரு.பாலமுருகன் மற்றும் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் திருமதி.அம்சலா அவர்கள் ஏற்பாடு செய்தனர். 


To Top