உரிமை பாதையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

விருதுநகர், 01.12.2024

விருதுநகர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பாக 01.12.2024 ஞாயிற்றுக்கிழமை, தேசபந்து மைதானத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை (World AIDS Day)  முன்னிட்டு "உரிமை பாதையில்" என்ற தலைப்பில்  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் மற்றும்  மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களின் முன்னிலையில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி, கையெழுத்து இயக்கம்,  மனித சங்கிலி மற்றும் ஆட்டோ ஊர்வலம் போன்ற நிகழ்வுகளை தொடங்கி வைத்து பொதுமக்களுடன் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்கள்.

இந்த நிகழ்வானது மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் திரு.வீ.வேலையா  மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் / IRCS மாவட்ட பொருளாளர் அவர்கள் மற்றும் திரு.அய்யனார் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மேற்பார்வையாளர் / IRCS மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் அவர்களின்  ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் விருந்தினராக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி விருதுநகர் மாவட்ட கிளை சார்பாக துணைச் சேர்மன் திரு.கோவிந்தன் அவர்கள், மாவட்ட செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



To Top