திருப்பத்தூர், 03.12.2024
சர்வதேச மாற்றுத்திறனாளிகளின் தினத்தை முன்னிட்டு 03.12.2024 செவ்வாய்க்கிழமை வாணியம்பாடி தாலுக்கா ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பாக, ஆலங்காயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஆயத்தப் பள்ளியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட திரு.சேர்மன் கிஷோர் பிரசாத் அவர்கள் கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் சேர்மன் சத்தியமூர்த்தி அவர்கள், வாணியம்பாடி தாலுகா சேர்மன் திரு.வடிவேலு சுப்பிரமணி அவர்கள், செயலாளர் திரு.தினேஷ் குமார் அவர்கள், பொருளாளர் திரு.பார்த்திபன் அவர்கள், நாட்றம்பள்ளி தாலுகா சேர்மன் திரு.விஜய் அவர்கள், மற்றும் மேற்பார்வையாளர் பிரபாகரன் அவர்கள், பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.