மாவட்ட அளவிலான ஜேஆர்சி ஆலோசகர்கள் பயிற்சி முகாம்

 

இராணிப்பேட்டை, 


இராணிப்பேட்டை மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் மாவட்ட அளவிலான ஜேஆர்சி ஆலோசகர்கள் பயிற்சி முகாம், ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் ஜேஆர்சி பெருந்தலைவர்  திருமதி.சரஸ்வதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகளின்படி நடைபெற்றது. ஜேஆர்சி மாவட்ட தலைவர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) திரு.வீ.விஜயகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜேஆர்சி கொடியினை ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தார். வெள்ளைநிற சீருடையுடன் 100 ஆலோசகர்கள் கலந்துகொண்டனர்.

இம்முகாமில் சேவை, ஒழுக்கம், கல்வி,சமூகப் பணிகள் அவசியம் என்றும், அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் ஜேஆர்சி அமைப்பு இயங்கவேண்டும் என வலியுறுத்தினார். பள்ளித் துணை ஆய்வாளர் (மா.க.அ.) திரு.செந்தில்குமார் அவர்கள், பள்ளி செயலர் வழக்கறிஞர் திரு.சொல்முத்தழகன் அவர்கள், நிர்வாக அலுவலர் வேலாந்தன், முதல்வர் திரு.மணிசேகரன் அவர்கள், ஆலோசகர் திரு.கோபால் அவர்கள், மாவட்ட பொருளர் திருமதி.புவனேஸ்வரி அவர்கள் ஆகியோர் முன்னிலை, மாவட்ட அமைப்பாளர் மற்றும் மாநிலக்கருத்தாளர் நல்லாசிரியர் முனைவர் க.வே.கிருபானந்தம் அவர்கள் ஜேஆர்சி முறைப்படி  மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் ஜேஆர்சி கொடியேற்றும் நிகழ்வினை ஒருங்கிணைத்ததோடு ரெட்கிராஸ் இயக்க வரலாறு குறித்தும், பள்ளிகளில் ஜேஆர்சி குறித்து இணையமைப்பாளர் திரு.ஒய்.பால்ராஜ் அவர்கள் விளக்கினார். ஜேஆர்சி பாடல் பயிற்சியினை இணையமைப்பாளர் திரு.கார்த்திகேயன் அவர்கள், திரு.சாதிக் பாட்ஷா அவர்கள் அளித்தார்கள். 

பயிற்சி முகாமில் இந்தியன் ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் திரு.ரகுநாதன் அவர்கள் பங்கேற்று கண்தானம், இரத்ததானம், உடல்நலன் மற்றும் சேவை குறித்து விளக்கினார். ஜேஆர்சி கொடி முறையாக இறக்கப்பட்டு பள்ளி முதல்வரிடம் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஆலோசகர்கள் திரு.கார்த்திகேயன் அவர்கள், திரு.குமரவேல் அவர்கள், திரு.ஆறுமுகம் அவர்கள், ராமகிருஷ்ணா பள்ளி ஆலோசகர்கள் திரு.மணிவண்ணன் அவர்கள் மற்றும் ஜூலியட் உறுதுணையாக இருந்தனர்.

To Top