ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்த தான முகாம்

 

பெரம்பலூர்,  


பெரம்பலூர் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அமைப்பின் மேலாண் தலைவர் திரு.M.தங்கராஜ் அவர்கள் முன்னிலையில், மதிப்புமிகு சார் ஆட்சியர் திரு.சு.கோகுல் இ.ஆ.ப. அவர்கள் தலைமையேற்று முகாமினை துவக்கிவைத்து சிறப்பித்தார். முன்னால் பெரம்பலூர் ரெட் கிராஸ் அமைப்பின் தலைவரும் ரோவர் கல்விக் குழுமத்தின் தலைவருமாகிய மதிப்புமிகு திரு.K.வரதராஜன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்பித்தார். 

இரத்த தான முகாமில் 52 குருதி கொடையாளர்கள் ரத்தம் வழங்கி சிறப்பித்தனர். குருதிக்கொடையாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்பது.
அரசு மாவட்ட  தலைமை மருத்துவமனை இணைஇயக்குநர் திரு.மாரிமுத்து அவர்கள், அமைப்பின் மேலாண் துணைத் தலைவர் திரு.நா.ஜெயராமன் அவர்கள், முதல்வர் முனைவர் திரு.S.சிவக்குமார் அவர்கள், மாவட்ட  ரத்த வங்கி மருத்துவர் வெ.சத்யா அவர்கள் முன்னிலை வகித்தனர்.

மேலும் அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் மருத்துவர் கோசிபா அவர்கள், திரு.ராஜேந்திரன் அவர்கள், திரு.ராஜா அவர்கள், திரு.கார்த்திகேயன் அவர்கள், ஆகியோர் இம்முகாமில் கலந்துகொண்டு பெருமைபடுத்தினர். YRC ஒருங்கிணைப் பாளர் முனைவர் திரு.V.தனலட்சுமி அவர்கள், நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுரேஷ் அவர்கள், முனைவர் மு.தேவகி அவர்கள், திரு.வில்ல வனம் அவர்கள், NCC அலுவலர் திரு.பிரவீன் பெருமாள் அவர்கள், முனைவர் ஜீவானந்தம் அவர்கள், சிவப்பு நாடா அமைப்பின் அமைப்பாளர் முனைவர் சுப்ரமணியன் அவர்கள் இரத்த தான முகாம் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.  

பெரம்பலூர் மாவட்ட கௌரவ செயலாளர் திரு.V.ராதாகிருஷ்ணன் அவர்கள் முக்கிய விருந்தினர்களை வரவேற்று பேசினார். கௌரவ பொருளாளர் திரு.மு.ஜோதிவேல் அவர்கள் நன்றி கூற இரத்த தான முகாம் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

To Top