இல்லம் தேடி மருத்துவ பிரிவு வாகனங்கள் துவக்க நிகழ்வு

RED THINK

 

தமிழ்நாடு, 02.01.2025


இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை மற்றும் REC லிமிடெட் அறக்கட்டளை பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் கீழ், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நீலகிரி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய 7 மாவட்ட கிளைகளுக்கு இல்லம் தேடி மருத்துவர் - நடமாடும் மருத்துவப் பிரிவு வாகனங்களை மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சென்னை ராஜ்பவனிலிருந்து காணொளி காட்சி வாயிலாக 02.01.2025 இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். 


இந்த நிகழ்ச்சியில் REC லிமிடெட் அறக்கட்டளை சுயாதீன இயக்குநர் திரு.நாராயணன் திருப்பதி அவர்கள், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை  சேர்மன் டாக்டர்.நீதிபதி.ஜெயச்சந்திரன் அவர்கள், மாநில பொதுச் செயலாளர், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள், REC லிமிடெட் அறக்கட்டளை பொறுப்பளர்கள் கலந்து கொண்டனர். மேலும் 7 மாவட்ட கிளை பொறுப்பளர்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர். 



3/related/default