கன்னியாகுமரி, 26.01.2025
கன்னியாகுமரி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிளை சார்பாக 76- வது குடியரசு தின விழா நிகழ்ச்சியானது 26.01.2025 இன்று மாவட்ட ரெட் கிராஸ் அலுவலக வளாகத்தில் வைத்து மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் Dr.N.S. குமாரதாஸ் அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் திரு.I.ஜிம்சன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்கள் ரெட் கிராஸ் பேட்ரன் திரு. நரேந்திரநாத் பாபு அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்கள் ரெட் கிராஸ் பேட்ரன் திரு. அபிஷேக் வெங்கடேஷ் அவர்கள், ரெட் கிராஸ் கொடியை ஏற்றி வைத்தார்கள். மாவட்ட ரெட் கிராஸ் நிர்வாக குழு உறுப்பினர்கள், சப் கமிட்டி நிர்வாகிகள், பேட்ரன் உறுப்பினர்கள், ஆயுள் கால உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் நாகர்கோவில் கார்ப்பரேஷன் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது மாவட்ட ரெட் கிராஸ் நிர்வாக குழு உறுப்பினர் பேராசிரியர்.முனைவர்.ஜெயந்தி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்கள்.