தளவாய்புரத்தில் ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் முகாம்

 

சிவகாசி கல்வி மாவட்டம், 26.01.2025  

ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட மாணவர்கள் முகாம் இராஜபாளையம், தளவாய்புரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் முகாம் மூன்று நாட்கள் நடைபெற்றது. இம் முகாமின் ஒரு பகுதியாக 26.01.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி விருதுநகர் மாவட்ட சேர்மன் திரு பா. கண்ணன் அவர்கள், மாவட்டச் செயலாளர் திரு பாலமுருகன் அவர்கள் மற்றும் நடமாடும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியை திரு.ராஜசேகரன் சிவகாசி கல்வி மாவட்ட ஜே.ஆர்.சி கன்வீனர் மற்றும் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் அவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். மாவட்ட சேர்மன் திரு பா. கண்ணன் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் செயல்பாடுகளை  விளக்கிக் கூறினார். மாணவர்கள் தன்னார்வத்தோடு பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். மேலும் நமது நடமாடும் மருத்துவ வாகனத்தை பார்வையிட்டனர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இலவச மருத்துவ பயனை பெற்றனர்.  

To Top