அரியலூர், 26.01.2025
அரியலூர் மாவட்ட அமைப்பின் சார்பாக, அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 26.01.2025 இன்று நடைபெற்ற 76 வது குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தலைவர் / மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு.பொ.இரத்தினசாமி இஆப, அவர்கள் இந்திய தேசிய கொடியினை ஏற்றி மாவட்ட அளவில் சிறப்பாக பணிபுரிந்த அனைத்து துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்கள்.
இந்நிகழ்வில் அரியலூர் மாவட்ட ரெட் கிராஸ் அமைப்பின் மாவட்ட சேர்மன் திரு.ஜெயராமன் அவர்களின் சிறப்பான செயல்பாடுகளுக்கு தலைவர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.