இளைஞர் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புதிய கூட்டரங்கில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தேனி மாவட்ட கிளையின் சார்பில் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளின் இளைஞர் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி துணை சேர்மன் திரு.வி.மகாராஜன் அவர்கள், செயலாளர் திரு.க.சுருளிவேல் அவர்கள், பொருளாளர் திரு.எஸ்.முகமது ஷேக் இப்ராஹிம் அவர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு.எஸ்.மணி அவர்கள், திரு.ஏ.முகமது பாஷா அவர்கள் கருத்தரங்கை துவக்கி வைத்தனர்.
கருத்தரங்கில் ரெட் கிராஸ் வரலாறு, அடிப்படைக் கொள்கைகள், ஜெனிவா உடன்படிக்கைகள், கல்லூரிகளில் இளைஞர் ரெட் கிராஸ் செயல்பாடுகள், இரத்ததானம் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு போன்ற பல்வேறு தலைப்புகளில் கருத்தாளர்கள் பயிற்சி வழங்கினர்.
ஜூனியர் ரெட் கிராஸ் நிர்வாகிகள் திரு.ஏ.செல்வன் அவர்கள், திரு.ஒ.பார்த்திபன் அவர்கள், திரு.ஈ.ஜெகநாதன் அவர்கள், திருமதி. சிறுமலர் அவர்கள், நிர்வாகச் செயலர் மீனாம்பிகை அவர்கள், ஜோதி அவர்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு ஆய்வாளர் தனலட்சுமி அவர்கள் கருத்தாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.