அரியலூர், 14.04.2025
கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராசப்பெருமாள் கோயில் சித்திரை தேர்த்திருவிழா நிகழ்விற்கு வருகை புரிந்த பக்தர்களுக்கு கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட கிளையின் சார்பில் 14.04.2025 திங்கள் கிழமை இன்று காலை 11:00 மணி அளவில் 3,000 தண்ணீர் பாட்டில் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வினை அரியலூர் மாவட்ட சேர்மன் திரு.செ.ஜெயராமன் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை சேர்மன் திரு.மு.சந்திரசேகர் அவர்கள், மாவட்ட செயலாளர் திரு.ஆ.சண்முகம் அவர்கள், மாவட்ட துணைச் செயலாளர் திரு.மு.அசோக்குமார் அவர்கள், மேனாள் தலைவர் திரு.அ.நல்லப்பன் அவர்கள், துணைப் புரவலர் சகானா திரு.து.காமராஜ் அவர்கள், நியமன துணைத் தலைவர் வழக்கறிஞர் திரு.க.செல்வராஜ் அவர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர் / ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட கன்வீனர் திரு.சிவசங்கர் அவர்கள், ஆயுள் உறுப்பினர்கள் திரு.நமச்சிவாயம் அவர்கள், திரு.சடையப்பன் அவர்கள், உள்ளிட்ட ரெட் கிராஸ் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தண்ணீர் பாட்டிலை இலவசமாக விநியோகம் செய்தனர்.
நிறைவாக ஆயுள் உறுப்பினர் திரு.இராஜேந்திரன் அவர்கள் நன்றி உரையாற்றி நிறைவு செய்தார். இந்நிகழ்வினை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினார்கள்.