தூத்துக்குடி, 07.07.2025
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா முன் ஏற்படக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளையின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டம் சார்பாக இல்லம் தேடி மருத்துவ வாகன சேவை மற்றும் முதலுதவி சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன் திட்டமிடல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 06.07.2025 அன்று திருச்செந்தூர் கோவில் அவசர உதவி மையத்தில் நடைப்பெற்றது. தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் முனைவர்.கருப்பசாமி அவர்கள், திரு.வன்னியராஜா அவர்கள் மற்றும் திரு .பெஞ்சமின் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட சுகாதார அலுவலர் அவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி தலைவர் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வழிகாட்டுதல் வழங்கினார்கள்.
இந்த கும்பாபிஷேக விழா சேவை பணியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்ட ரெட் கிராஸ் உறுப்பினர்கள் மக்களுக்கு உதவ, முதலுதவி பணியில் இரண்டு நாட்கள் ஈடுபட்டனர். மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மூன்று மாவட்ட மருத்துவ வாகனங்கள் மற்றும் இராமநாதபுரம் நோயாளர் ஊர்தி, சுழற்சி முறையில் மருத்துவச் சேவை வழங்கினார்கள்.