இராமநாதபுரம், 28.12.2025
கடைக்கோடி மக்களுக்கும் சுகாதார சேவை என்ற முக்கிய நோக்கத்துடன் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை மற்றும் REC லிமிடெட் அறக்கட்டளை பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் கீழ், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய 3 புதிய மாவட்ட கிளைகளுக்கு இல்லம் தேடி மருத்துவர் நடமாடும் மருத்துவப் பிரிவு (Mobile Medical Units) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
3 வாகன துவக்க நிகழ்ச்சி ஆனது இராமநாதபுரம் ரெட் கிராஸ் அலுவலகத்தில் வைத்து, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை துணைத் தலைவர் மற்றும் சேர்மன் டாக்டர்.நீதிபதி.ஜெயச்சந்திரன் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு வரவேற்றார், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சங்கர நாராயணன் அவர்கள் முன்னிலையில், REC லிமிடெட் அறக்கட்டளை சுயாதீன இயக்குநர் திரு.நாராயணன் திருப்பதி அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் REC லிமிடெட் நிறுவன தலைமை திட்ட மேலாளர் திருமதி.தாரா ரமேஷ், மனித வள தலைமை மேலாளர் திரு.இமானு வேல் அந்தோணி தாஸ், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு.ஓம் பிரகாஷ் மற்றும் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் 10 மாவட்ட மருத்துவ குழுக்கள் பங்கேற்றனர்.
மாநில பொதுச் செயலாளர் திரு.K.வேதவியாஸ் அவர்கள் நன்றி கூறினார். இராமநாதபுரம் மாவட்ட சேர்மன் திரு.சுந்தரம் அவர்கள், செயலாளர் திரு.ரமேஷ் ஆகியோர் வழிகாட்டுதலிப்படி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.