போதைப்பொருட்கள் மற்றும் தற்கொலை எண்ணங்களை வெல்வது எப்படி பயிற்சி நிகழ்ச்சி


தென்காசி, 24.01.2026

ஜேபி பொறியியல் கல்லூரியில் 24.01.2026 அன்று போதைப்பொருள் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி  தென்காசி மாவட்ட கிளை சார்பில் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட YRC மாணவர்கள் இதில் பங்கேற்றனர், பல்வேறு போதைப்பொருட்கள் மற்றும் மன அழுத்த மேலாண்மை, கோப மேலாண்மை, தலைமைத்துவப் பண்புகள் மற்றும் தற்கொலை எண்ணங்களை வெல்வது எப்படி என்பன ஆகியவை பயிற்றுவிக்கப்பட்டன. 


இப்பயிற்சி நிகழ்ச்சியில் ஜேபி பொறியியல் கல்லூரி முதல்வர் அவர்கள்  முன்னிலையில், YRC மாவட்ட அமைப்பாளர் மற்றும் கௌரவச் செயலாளர் திரு.எஸ். ரவிச்சந்திரன் அவர்கள் ஏற்பாடுகள் செய்தார்கள். மாநில முதலுதவி விரிவுரையாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் திரு.பிளைத் சுதர் அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார்.  


இந்த நிகழ்ச்சிக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி  தமிழ்நாடு மாநிலக் கிளையால் நிதியுதவி வழங்கியது.



To Top