விருதுநகர், 03.02.2026
விருதுநகர் மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் க்ஷத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 03.02.2026 திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட சேர்மன் மற்றும் துணை சேர்மன் அவர்களின் வழிகாட்டலின் படி தலைமை ஆசிரியர் திருமதி எம்.அமுதா எம்.ஏ., பி.எட்., அவர்கள் முன்னிலையில், நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக திருமதி.ஜி.அம்சலா கணினி உதவியாளர் - DAPCU அவர்கள் மற்றும் திருமதி.எஸ்.சுசிலா DPCS - திட்ட மேலாளர் அவர்கள் கலந்துகொண்டு 100க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் திரு.ரா.பாலமுருகன் மற்றும் ஜே.ஆர். சி பொறுப்பாளர் திருமதி.எம்.வெலாட்சி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.