விருதுநகர், 09.02.2026
விருதுநகர் மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் 09.02.2026 திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு வெம்பக்கோட்டை அரசு மேல்நிலை பள்ளி மற்றும் சிபியோ உண்டு உறைவிட பள்ளி இணைந்து தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி மாவட்ட சேர்மன் திரு.கண்ணன் அவர்கள் வழிகாட்டுதலின்படி, துணை சேர்மன் திரு.கோவிந்தன் அவர்கள் மற்றும் வெம்பக்கோட்டை துணை காவல் ஆய்வாளர் திரு.முருகேஸ்வரன் அவர்கள் தலைமையில், தலைமை ஆசிரியர் திருமதி.பத்மா அவர்கள் முன்னிலையில் 150 க்கு மேற்பட்ட வெம்பக்கோட்டை அரசு மேல்நிலை பள்ளி மற்றும் சிபியோ உறைவிட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் திரு.பாலமுருகன் அவர்கள் மற்றும் பள்ளி ஜேஆர்சி பொறுப்பாளர் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள் ஏற்பாடு செய்தனர்.