தேனி, 02.05.2026
இந்தியன் ரெட் கிராஸ் தேனி மாவட்ட கிளை சார்பில் சர்வதேச தொழிலாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தேனி அரண்மனை புதூர், முல்லை நகரில் அமைந்துள்ள டாக்டர் அவென்யூ மருதம் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக மருதம் பூங்கா சீரமைக்கப்பட்டு 50 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
இவ்விழாவை மாவட்ட சேர்மன் திரு.என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் அவர்கள் தலைமையில், துணை சேர்மன் திரு.வி.மகாராஜன் முன்னிலை, மாவட்ட செயலாளர் திரு.சுருளிவேல், பொருளாளர் திரு.முகமது ஷேக் இப்ராஹிம், நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு.சிதம்பரநாதன், திரு.முகமது பாட்சா, திரு.ஜெகநாதன், உறுப்பினர்கள் சுந்தர், சுருளிப்பட்டி அன்புராஜா, முல்லை நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.