அரியலூர், 08.05.2026
மே 8, சுவிட்சர்லாந்த் நாட்டில் ஜீன் ஹென்றி டுனாண்டு அவர்களின் பிறந்த நாளை ஆண்டுதோறும் உலக ரெட் கிராஸ் தினமாக உலக நாடுகளால் அனுசரிக்கப்பட்டுகிறது. ரெட் கிராஸ் நிறுவனர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 08.05.2026 இன்று காலை 10.30 மணியளவில் அரியலூர் மாவட்ட அமைப்பின் சார்பில் அரியலூர் பேருந்து நிலையத்தில் மாவட்ட தலைவர் திரு.ஜெயராமன் அவர்கள் தலைமை ரெட் கிராஸ் நிறுவனர் ஜீன் ஹென்றி டுனாண்டு திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நகராட்சி முதன்மை சுகாதார ஆய்வாளர் திரு.அந்தோணி ஸ்டீபன் அவர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறை துணை ஆய்வாளர் திரு.உலகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீர் மோர் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தனர்.
மேலும் மாவட்ட துணைத் தலைவர் திரு.சந்திரசேகர் அவர்கள், மாவட்ட செயலாளர் திரு.சண்முகம் அவர்கள், மாவட்ட பொருளாளர் திரு.எழில் அவர்கள், முன்னாள் தலைவர் திரு.நல்லப்பன் அவர்கள், துணைப் புரவலர் கதிர்.கணேசன் அவர்கள், துணைப் புரவலர் திரு.சகானா காமராஜ் அவர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் திருமதி.சிவபாக்கியம் அவர்கள், திருமதி.அம்சவள்ளி அவர்கள், திரு.சிவசங்கர் அவர்கள், ஆயுள் உறுப்பினர் திரு.சடையப்பன் அவர்கள், திருமதி.அமுதா அவர்கள், தன்னார்வலர் திரு.சரவணன் அவர்கள், திரு.ஆண்டின் தாஸ் அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 2000 பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி சிறப்பித்தனர். நிகழ்வினை பயணிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சிறப்பான நிகழ்ச்சி என பாராட்டினார்கள்.