மகளிர் கல்வியியல் கல்லூரியில் உலக ரெட் கிராஸ் தின நிகழ்ச்சிகள்

தென்காசி, 08.05.2026

தென்காசி மாவட்டம் இலஞ்சி டி.டி.டி.ஏ ராஜம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தென்காசி மாவட்டக் கிளை சார்பாக உலக ரெட் கிராஸ் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு ராஜம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி தாளாளர் திரு.ராஜ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்கள். முதல்வர் முனைவர்.ஷீலா நவரோஸ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். 


சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இளைஞர் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளருமான முனைவர் திரு.இனநலப்பெரியார் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ரெட் கிராஸ் தின முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்நிகழ்விற்கு சுரண்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு.கே.டி.கே.காமராஜ் மற்றும் செயலர் எஸ் எம் டி ரத்தினசாமி சிறப்பு வருகை புரிந்தனர். 


மேலும் நிகழ்வில் பேச்சுப் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மருத்துவர் வேந்தர் அவர்கள், முன்னாள் கல்வி அதிகாரி திரு.சந்திரசேகரன் அவர்கள், திரு.அந்தோணி அவர்கள், திரு.கணேசன் அவர்கள், திரு.இலஞ்சி குமரன் அவர்கள், உதவிப்பேராசிரியர்.ஜெபா எபனேசர் அவர்கள் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வு ஏற்பாடுகளை இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் தென்காசி மாவட்டக் கிளை செயலாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்களும் தென்காசி மாவட்ட இளைஞர் ரெட் கிராஸ் அமைப்பாளர் உதவிப்பேராசிரியர் திரு.சிவசெல்வகணேஷ் அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.

To Top