குன்னூர் அருகே இலவச பொது மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம்


நீலகிரி,  18.05.2026

குன்னூர், பந்துமை கிராம சமுதாயக் கூடத்தில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நீலகிரி மாவட்ட கிளை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. மருத்துவர் ஜெனி மார்டினஸ் அவர்களது  குழுவினர் பொது மருத்துவ பரிசோதனையும், கண் மருத்துவர் பிரவின் அவர்கள் கண் பரிசோதனையும் வழங்கினர். இம்முகாமில் 70 மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். மேலும் நீலகிரி மாவட்ட செயலாளர் திரு.மோரிஸ் சாந்தா குரூஸ் அவர்கள் மற்றும் கிராம செயலாளர் திரு.சிவா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


To Top