பொன்மேனியில் ரெட்கிராஸ் தின இலவச கண் மருத்துவ முகாம்

RED THINK

மதுரை, 25.05.2026


உலக ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு, மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இலவச கண் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். 250-க்கும் அதிகமான நபர்களுக்கு இலவச மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், தேவையான நபர்களுக்கு கண்ணாடி அணிந்திட பரிந்துரைகளும், 21 நபர்களுக்கு உடனடியாகக் கண் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கும் பணியை, மதுரை மாவட்ட ரெட் கிராஸ் முன்னாள் செயலாளர் திரு.ராஜ்குமார் அவர்கள் மேற்கொண்டார்.



3/related/default