தேனி, 13.05.2026
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தேனி மாவட்ட கிளை சார்பில், தேனி என்.ஆர்.டி.நர்சிங் கல்லூரி மற்றும் தேனி அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் இன்று 13.05.2026 என்.ஆர்.டி.நர்சிங் கல்லூரியில் நடைபெற்றது. என்.ஆர்.டி. நர்சிங் கல்லூரியின் தாளாளர் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் திரு.என்.ஆர்.டி.ஆர். தியாகராஜன் அவர்கள் இரத்ததான முகாமைத் துவக்கி வைத்தார்.
இரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் மருத்துவர் திருமதி.பிரியா அவர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் இரத்த சேகரிப்பில் ஈடுபட்டனர். இம் முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இரத்த தானம் செய்தனர். இரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
மாவட்ட ரெட் கிராஸ் துணை சேர்மன் திரு.வி.மகாராஜன் அவர்கள், செயலாளர் திரு. க.சுருளிவேல் அவர்கள், உறுப்பினர்கள் திரு.காமராஜ் அவர்கள், திரு.சரவணகுமார் அவர்கள், என்.ஆர்.டி. நர்சிங் கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி திருமதி.ஹேமா அவர்கள், கல்லூரி முதல்வர் திரு.விஜய் அவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.