மதுரை, 13.05.2026
உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள ஆதரவற்றோர் அன்னையர்களை ஆன்மீக சுற்றுலாவாக ராமேஸ்வரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மதுரை மாவட்ட ரெட் கிராஸ் முன்னாள் செயலாளர் திரு.ராஜ்குமார் அவர்கள் முன்னெடுப்பில், ராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் திரு.ரமேஷ் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் ஆதரவற்ற அன்னையர்களை வரவேற்று கேக் வெட்டி கொண்டாடியும், உணவளித்தும் மகிழ்ந்தனர். மேலும் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள தனுஷ்கோடி பல சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் சென்றும், ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்திடவும் ராமேஸ்வரம் மாவட்ட ரெட் கிராஸ் நிர்வாகிகள் பேருதவி செய்தனர்.