ஜூன்-5 உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாட்டம்

 

மதுரை, 05.06.2026

ஜூன்-5 உலக சுற்றுச்சூழல் நாளை கொண்டாடும் விதமாக மதுரை மாவட்ட ரெட் கிராஸ் முன்னாள் செயலாளர் திரு.ராஜ்குமார் அவர்கள் ஒருங்கிணைப்பில் 05.06.2026 அன்று மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது. இன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக  மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. விஜய் அன்பன் கல்லாணை அவர்கள், ஸ்டார் குரு சாரிட்டபிள் நிறுவனர் திரு.குருசாமி  காந்தி அருங்காட்சியக பொருளாளர் திரு. செந்தில் குமார் அவர்கள், செயலாளர் நந்தாராவ் கல்வியாளர்கள் திரு.நடராஜன்அவர்கள், திரு. தேவதாஸ் அவர்கள், அலுவலர்கள், அரசு குருதி வங்கி மருத்துவர்கள், ரெட்கிராஸ் பொறுப்பாளர்கள்மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து சிறப்பித்தனர்.



To Top