செங்கல்பட்டு, 05.06.2026
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலிப்படி, IRCS செங்கல்பட்டு மாவட்டக் கிளையின் சேர்மன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து சிறப்பாக நடைபெற்றன:
1) பொலம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி.
2) மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை எவ்வாறு பிரித்தெடுப்பது என்பது குறித்த செயல்முறைப் பயிற்சிப் பட்டறை.
3) சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி.
இந்நிகழ்ச்சிகள் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், சித்தாமூர் கிராம ஊராட்சி மற்றும் IRCS செங்கல்பட்டு மாவட்டக் கிளை ஒருங்கிணைத்து, பொலம்பாக்கம் சந்தோஷி நர்சிங் கல்லூரி YRC குழுவினர் கலந்து கொண்டனர். சித்தாமூர் கிராம ஊராட்சித் தலைவர் திரு. சிவகுமார் அவர்கள் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
IRCS செங்கல்பட்டு மாவட்டக் கிளையின் சார்பில் மாவட்டச் செயலாளர் பேராசிரியர் ஆர். மாணிக்கம், துணை சேர்மன் திரு. ஆர். மோகனவெங்கடேசன், மாவட்டப் பொருளாளர் திரு.எம். கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) மற்றும் அவரது குழுவினர், சந்தோஷி நர்சிங் கல்லூரியின் பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் YRC தன்னார்வலர்கள் குழுவினர் ஆகியோர் மிகுந்த ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மாவட்ட நிர்வாகத்தின் சுற்றுச்சூழல் துறை மற்றும் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றின் சிறப்பான ஏற்பாடு மற்றும் மிகச் சிறந்த ஒருங்கிணைப்பு பாராட்டத்தக்கது. மேலும் தன்னார்வலர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வெள்ளை நிறத் தொப்பிகள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.