தேனி, 04.06.2026
தேனி மாவட்ட ஆட்சித்தலைவராக உயர்திரு.மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் 31.05.2026 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தேனி மாவட்ட கிளை சார்பில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தேனி மாவட்ட கிளை தலைவர் / மாவட்ட ஆட்சியர் உயர்திரு.மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்களை 04.06.2026 அன்று மாவட்ட சேர்மன் திரு.என்.ஆர்.டி.ஆர். தியாகராஜன் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது மாவட்ட ரெட் கிராஸ் துணை சேர்மன் திரு.வி.மகாராஜன் அவர்கள், செயலாளர் திரு. க.சுருளிவேல் அவர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.