தேனி, 14.06.2026
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தேனி மாவட்டம் சார்பில் சர்வ தேச இரத்தக் கொடையாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு இரத்த தான முகாம் தேனி, பெரியகுளம் சாலையில் உள்ள பிரசன் கான்வென்ட் டேஷன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 14.06.2026
ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு தேனி மாவட்ட ரெட் கிராஸ் துணை சேர்மன் திரு.வி.மகாராஜன் அவர்கள் தலைமையில், பொருளாளர் திரு.எஸ்.முகமது ஷேக் இப்ராஹிம் அவர்கள் முன்னிலை, தேனி நாயுடு சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அமைப்பின் தலைவர் திரு.ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். காணிக்கை சகோதரிகளின் இல்லத் தலைவி ரூபி அவர்கள், கான் வென்ட் பள்ளி நிர்வாகி ஹில்டா ஆகியோர் இரத்தக் கொடையாளர்களை வாழ்த்தி பேசினர்.
ரெட் கிராஸ் மேலாண்மை குழுஉறுப்பினர்கள் திரு.ஏ.முகமது பாஷா அவர்கள், திரு.கொடியரசன் அவர்கள், திரு.எல்.கே.சிவமணி அவர்கள், திரு.எஸ்.காமராஜ் அவர்கள், திரு.வி.சிதம்பரநாதன் அவர்கள், திரு.சுந்தர் அவர்கள், திரு.நாகஜோதி அவர்கள், ஜூனியர் ரெட் கிராஸ் நிர்வாகிகள் திரு.ஒ.பார்த்திபன் அவர்கள், திரு.ஈ.ஜெகநாதன் அவர்கள், திரு.ஜி.ஒண்டி ராஜா அவர்கள், ஆரோக்கிய அமலி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டியின் கெளரவச் செயலாளர் திரு.க.சுருளிவேல் அவர்கள் செய்திருந்தார்.