உலக குருதி கொடையாளர்கள் தின சிறப்பு இரத்ததான முகாம்

 

சிவகங்கை, 15.06.2026

உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சிவகங்கை மாவட்டம் கிளை சார்பில்,   ஹெல்பிங் மைன்ட்ஸ் மற்றும் காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, நேஷனல் பயர் அண்டு சேப்டி, இளையோர் ரெட் கிராஸ் இணைந்து நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமை கனிம வளத்துறை அமைச்சர் மாண்புமிகு.டி.கே.பிரபு அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஹெல்பிங் மைன்ட்ஸ் நிறுவனர், தலைவர் திரு.முகமது அசாருதீன் அவர்கள், செயலாளர் திரு.மனோஜ் அவர்கள், பொருளாளர் திரு.ராம்கி அவர்கள் ஆகியோர் வரவேற்றனர். 

இரத்ததானம் செய்த 50 கொடையாளர்களுக்கு தலைகவசம் மற்றும் சான்றிதழ்களை  மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் ராஜ்குமார் அவர்கள் தலைமையில், மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்றனர் நிகழ்ச்சியில் நேஷனல் கேட்டரிங் கல்லூரி தாளாளர் சையது அவர்கள், இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட தலைவர் திரு.சுந்தரராமன் அவர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரு.மனோஜ் அவர்கள், திரு.அப்துல்காதர் அவர்கள், திரு.சிக்கந்தர் அவர்கள் மற்றும் திரு.நசீர் அவர்கள், திரு.இருதயராஜ் அவர்கள், திரு.முகமது கனி அவர்கள், திரு.ஆசாத் அவர்கள், திரு.சமீர் அவர்கள், திரு.ரியாஸ் அவர்கள், திரு.பாசித் அவர்கள் உள்பட காரைக்குடி ஹெல்பிங் மைண்ட் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

'image.png' failed to upload.

To Top