கூடலுார் தேயிலை வாரிய அலுவலகத்தில் இரத்த தானம் முகாம்

 

நீலகிரி, 16.06.2026

கூடலுார் தேயிலை வாரியம் மண்டல அலுவலகத்தில், உலகரத்ததான தினத்தை முன்னிட்டு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், இரத்த தானம் முகாம் நடந்தது.

ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் திரு.மோரிஸ் சாந்தாகுருஸ் அவர்கள் தலைமையில், டாக்டர் அர்ச்சனா அவர்கள் முன்னிலை இரத்த தானம் முகாம் நடைபெற்றது. மேலும் இரத்த தானம் வழங்குவதின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர். முகாமில், 26 பேர் பங்கேற்று இரத்த தானம் செய்தனர், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இம்முகாம் ஏற்பாடுகளை, தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர்கள் திரு.வருண் மேனன் அவர்கள், மீரா அவர்கள், அஞ்சலி ஆகியோர் செய்திருந்தனர்.

To Top