செவிலியர் கல்லூரியில் பேரிடர் கால மேலாண்மை குறித்த பயிற்சிகள்

 

கன்னியாகுமரி, 17.06.2026

கன்னியாகுமரி மாவட்டம், 17.06.2026 புதன்கிழமை அன்று புனித அந்தோணியார் செவிலியர் கல்லூரி (St. Anthony's Nursing College) மாணவர்களுக்கு, பேரிடர் காலங்களில் செவிலியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசரக்கால மேலாண்மை குறித்த பயிற்சிகள் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் 75 செவிலியர் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். பாடத்திட்டத்தின்படி, அவசரக்கால தங்குமிட மேலாண்மை, உளவியல் ரீதியான ஆதரவு மற்றும் மீட்பு முறைகள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிகளை மாநில முதலுதவி விரிவுரையாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் திரு.பிளைத் சுதர் அவர்கள் வழங்கினார். மேலும் கல்லூரி முதல்வர், நிர்வாகி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


To Top